அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிதம்பரம், சுவாமி சகஜானந்தா அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாள் தொழிற்பிரிவில் காலியாக உள்ள பயிற்றுநர் பணியிடம் ஒன்று நிரப்பப்பட உள்ளது. இன சுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவுள்ள இப்பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
வயது வரம்பு அரசு நிர்ணயித்தபடி, கல்வித் தகுதி பி.இ., பொறியியல் பட்டம், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஒரு வருட முன் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றுடன், முதல்வர், சுவாமி சகஜானந்தா அரசினர் தொழில்பயிற்சி நிலையம், சீர்காழி பிரதான சாலை, சிதம்பரம் என்ற முகவரிக்கு நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...