அரசு பள்ளியில், போதையில் தள்ளாடிய தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டார்.தர்மபுரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை
ஆசிரியர் குணசேகரன்.
இவர் நேற்று முன்தினம் பள்ளியில், தன் அறையில் மது
குடித்தார். போதை தலைக்கு ஏறிய நிலையில், தள்ளாடிபடி வெளியே வந்த அவர்,
பள்ளி வளாகத்திற்கு வெளியே மது பாட்டிலை வீசியுள்ளார். இதை கண்ட அப்பகுதி
மக்கள் குணசேகரனை தட்டி கேட்டனர். மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு
புகார் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி, கூடுதல் தொடக்க
கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று, மக்களின் முற்றுகையில் இருந்த
தலைமையாசிரியர் குணசேகரனை மீட்டார். பின், மக்களிடம் விசாரித்து, புகார்
மனுவை பெற்றார். கல்வித்துறையினரின் விசாரணையில், குணசேகரன் பள்ளியில் மது
அருந்தியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
பழனிச்சாமி, தலைமையாசிரியர் குணசேகரனை, நேற்று சஸ்பெண்ட் செய்து
உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...