Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தஞ்சையில் தபால் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

          தஞ்சாவூர்:தி.மு.க., புகாரை அடுத்து, தஞ்சை சட்டசபை தொகுதியில் நடக்க இருந்த, தபால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
 
         தஞ்சை சட்டசபை தொகுதியில், 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இப்பணியில், மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீசார், ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தபால் மூலம் ஓட்டளிக்க முடியும்.
 
          இதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, தஞ்சை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தபால் ஓட்டுக்களை பதிவு செய்ய, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அப்போது, தி.மு.க., தலைமை கழக வழக்கறிஞர் கணேசன் தலைமையில், தி.மு.க., வழக்கறிஞர் பிரிவினர் வந்து, ஆர்.டி.ஓ., சுரேஷிடம், 'தபால் ஓட்டுப்பதிவை நிறுத்த வேண்டும்' என, மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும், 310க்கும் அதிகமான வாக்காளர்கள், தபால் மூலம் ஓட்டளிக்க நேற்றும், இன்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அரசு பணியாளர்களை, தேர்தலில் பயன்படுத்தக் கூடாது. பொது தேர்தல் என்றால், ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும். இதனால், தொகுதிக்கு உட்பட்டவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம்.தஞ்சை மாவட்டத்தில், ஒரு தொகுதி யில் மட்டும் தான் ஓட்டுப்பதிவு நடக்கிறது. எனவே, இந்த பணியில், அருகில் உள்ள தொகுதியில் இருந்து, அரசு பணியாளர்களை பயன்படுத்தலாம்.
 
         அரசு பணியாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செல்படுவதுடன், தபால் ஓட்டுகளை ஆளுங்கட்சியினர் விலை கொடுத்தும் வாங்கி விடுவர். எனவே, தபால் ஓட்டுப்பதிவை நிறுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தனர்.மனுவை பெற்ற, ஆர்.டி.ஓ., சுரேஷ், கலெக்டர் அண்ணாதுரையிடம் தெரிவித்தார். கலெக்டர் அண்ணாதுரை, 'தேர்தல் ஆணையத்திடம் பேசி, முடிவு செய்யப்படும்' என கூறி, நேற்று நடக்க இருந்த தபால் ஓட்டுப்பதிவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.இதனால், தபால் ஓட்டுகளை பதிவு செய்ய வந்திருந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive