வாடிக்கையாளர்கள் இன்று முதல் வங்கிகளில் தேவையான பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அடுத்த அறிவிப்பை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணரும் முயற்சியாக, புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். செல்லாத நோட்டுகளை பொதுமக்கள் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்களிடமிருந்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகக் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் சட்ட விரோதமான முறையில் பிறரது வங்கிக் கணக்குகள் வாயிலாக அந்தப் பணத்தை வங்கிகளில் செலுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியில் அதிக அளவில் பணபரிவர்த்தனை செய்து விடக்கூடாது என்பதற்காக, நாடு முழுவதும் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இதன்காரணமாக அத்தியவாசிய தேவைக்கு வங்கியில் பணம் எடுப்பதற்கு நடுத்தர மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் தயங்கிவருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று முதல் வங்கிகளில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்த்தபடும். இதுவரை நடைமுறையிலுள்ள வரம்பிற்கு கூடுதலாக வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பணம் எடுத்து கொள்ளுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, வங்கிகளில் உயர் மதிப்புடைய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள் தளர்வு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறத
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...