திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், திருமண செலவிற்கு மட்டும் ரூ.2.5 லட்சம் வரை ஒரே தடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
நவ.,8 ம் தேதிக்கு முன் வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.
டிச.,30 க்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும்.
பெற்றோர் அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.
ரூ.2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
திருமண அழைப்பிதழ், முன்பண செலவு ரசீது விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளலாம்.
வங்கி கணக்கு உள்ளவர்கள் அவர்கள் கணக்கில் டிபாசிட் செய்து பின்னர் எடுத்து கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...