'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை
நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப்
பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு
நிறுத்தப்படும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...