Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருப்பு பணத்தை மாற்ற என்ன வழிகளை பின்பற்றுவார்கள் ??

     கருப்பு பணம் பதுக்கும் கூட்டதிற்க்கு எப்படி இது checkmate என்று கூறுகிறீர்?
வேறு வழிகளில் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லயா?
 
       தற்போதய நிலையில் கருப்புபணம் வைதிருப்போர் என்ன செய்கிறார்கள் என்ன செய்வார்கள்?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் மொத்தமாக பதில் இங்கே:

checkmate தான். இனி அந்த கருப்பு பணம் பதுக்கியவர்கள்  CA , BANK அதிகாரிகள், வருமானவரிதுறை அதிகாரிகள் அனைவரையும் வைத்து பெரிய அளவில் விவாதம் நடத்தி கொண்டு இருபார்கள்.


ஆனால் என்ன விவாதம் செய்தாலும் இதற்க்கு அனைத்து வழிகளும் மத்திய அரசு ஏறக்குறைய அடைத்துவிட்டது என்பது மட்டும் உண்மை. இதற்க்கு அரசு 1 வருடங்கள் முழுமையாக செயல் திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளது.

அதனை விளக்கும் முன்னர் இந்த சம்பளம் வாங்கும் மக்கள் கொஞ்சம் பொருமையாக இருங்கள். நீங்கள் என்ன அதிகபட்சம் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குவேங்களா? உங்களை வழிக்கு கொண்டுவருவது எளிது. மேலும் நீங்கள் அல்ல அரசின் குறி.

நீங்கள் ஒரு மாத சம்பளம் வாங்கும் நபர் என்றால் - அது infosys புராஜெக்ட் மேனேஜர் என்றாலும் சரி உங்களை ஒரு வீடு வாங்க வைத்து ஒரு கார் வாங்க சொல்லி நாளு EMI கட்ட வச்சா போதும். அடுத்த 20 வருசத்துக்கு எந்த பிரச்சனையும் அரசுக்கு இல்லை.

மேலும் வருமான வரிதுறையை பொருத்தவரை நீங்கள் மிகவும் தொந்தரவு இல்லாத நல்ல மக்கள். நீங்கள் கவலை கொள்ளவேண்டாம். இந்த நடவடிக்கை உங்களை நோக்கியது அல்ல. உங்களை கொஞ்சம் சிரமம் செய்ததற்க்கு அரசை மன்னிகவும். கொஞ்சம் ஒத்துழைக்கவும்.

சரி விசயத்திற்க்கு வருவோம்...

இந்த கருப்புபணம் வைத்திருப்போர் அனைவருக்கும் எப்படி இது checkmate..

1.இப்போதய நிலையில் பதுக்கிய பணத்தை வங்கியில் தான் மாற்றவோ இல்லை Deposit செலுத்தவோ முடியும்.

2.deposit பண்ணாமல் ரொக்கமாக மாத்த அதிகபச்சம் தினமும் 4000 தான் முடியும். Deposit எவ்வளவு வேனுமானாலும் பண்ணி கொள்ளலாம்.

3.ஒரு வேலை நீங்கள் அதிகம் deposit பண்ணினா அதுக்கு கணக்கு வச்சுகணும். இல்லைனா இன்றய அறிவிப்பின் படி 200% penalty கட்டவேண்டி வரும். {கணக்கு இல்லைனா உங்க கட்டுன பணத்தின் மதிப்பிற்க்கு உங்கள் வீடும் வாசலையும் இழக்க நேரிடும். கவனம். யாருக்கும் உதவுறேனு மாட்டிகிறாதீர்.}

4.தங்கம் வாங்கலாமா என்றால் அதுவும் முடியாது. அங்கே PAN card கேப்பான். அப்பவும் மாட்டிபேங்க.

5.சரி ஹவாலா பணமா கொண்டு செல்லமுடியுமா? அதுவும் முடியாது , அவன் இப்போதிக்கு அவனிடம் இருக்கும் பணமே செல்லாது. இதில் எப்படி மேலும் பணத்தினை அதுவும் காலாவதியான பணத்தினை ஏற்பான். எனவே கட்டாயம் நடக்காது.

6.சரி வேற வேற நபர்களிடம் குடுத்து பணத்தை வங்கிகளில் மாத்தலாம் என்றால் அதுவும் முடியாது. எவ்வளவு குடுத்து மாத்த முடியும்? வெறும் 10 கோடி மாத்த மட்டும் 2.5 லட்சம் வீதம் உங்களுக்கு தேவையான ஆட்கள் மட்டும் 400 ஆட்கள் 2 மாதங்கள் வங்கிக்கும் வீட்டுகும் அலையவேண்டும்.  {அதுல ஒருதன் போட்டு குடுத்தாலும் வைந்திருந்தவன் காலி}

ஆனால் வெளிவர வேண்டிய தொகை 15,00,000 கோடி!!! வாய்பே இல்லை. இதனால் வெறும் 1% கருப்பு பணம் கூட முறையாக மாற்ற முடியாது. {அரசியல் ஊழல்வதிகள் வீட்டில் குறந்தது 200 கோடி ரூபாய் பணமாக இருக்க வாய்ப்பிருபதாக கருதபடுகிறது.}

7.2.5 லட்சம் deposit செய்தாலும் வருமானவரிதுறை கணக்கு கண்டிபாக கேக்கும். எனவே அந்த முயற்ச்சியும் 100% சிறைக்கு தான் வழி காட்டும்.

8. சரி மொத்தமாக வைத்து கொள்வோம் பின்னர் பார்த்து கொள்வோம் என்றால், அடுத்த 30 நாளில் வங்கிக்கு செல்லவில்லை என்றால் அது வெறும் காகிதமே.

9.அரசு சொன்னது போல நாங்கள் 55% வரியை அபராதமாக கட்டிவிட்டு கணக்கு காட்ட தாயார் என்று சொல்லாம் என்றால், SORRY முடியாது. ஏன் என்றால்- காலம் முடிந்துவிட்டது. உங்களுக்கு அரசு குடுத்த நேரம் முடிந்துவிட்டது.

10.அட, ஒரு கால அவகாசம் குடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் முறையிடலாம் என்றால். அதுவும் முடியாது

  ஏறக்குறைய 1 வருடங்கள் மேலாக அரசு முறையாக கணக்கை ஒப்படைக்க அனைத்து கருப்புபணம் பதுக்கிய நபர்களுக்கும் கால அவகாசம் குடுத்தது. அதனை மூன்று முறை கால நீட்டிப்பும் செய்தது. இதுக்கு மேல ஒன்னும் செய்ய முடியாது. அப்போ எங்கே போனேங்க என்று நீதிமன்றம் கேக்கும்.

{நாலு 500 ருபாய் நோட்டு வச்சுருக்க மக்களே இவ்வளவு பதட்டமான அழையும் போது கருப்பு பணம் 200 கோடி 300 கோடி என்று வைதிருக்கும் கூட்டத்தின் பதட்டம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது}

SO SORRY.....

பங்கு சந்தை , வீடு வாசல் , நிலம் , கடன் குடுக்குறது பினாமி எல்லமே அடைக்க பட்டுவுட்டது. கொஞ்சம் உங்களை சுற்றி பாருங்கள் விவரம் எளிதில் புரியும். எங்கே போனாலும் வங்கிக்கு தானே கடைசியில் பணம் வந்தாகனும்!!! எனவே எப்படியும் பிடிசுருவாங்க.

தப்பிக்க என்னதான் வழி?
 அந்த காகிதங்களை அழித்துவிடுவது தான் ஒரே வழி.. checkmate.

அறிவுக்கு எட்டியவரை இது தான் நடக்கும். நடக்கிறது.
இன்னும் 30 நாட்களில் நடக்க போகும் கூத்தை அரசுடன் நாமும் பார்த்து ரசிப்போம்.

சில அரசியல்வாதிகள் முங்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும் என்று தங்கள் கவலையை தெரிவிப்பது புரிகிரது. சொல்லி இருந்தால்  எப்படி பதுக்கலாம்னு தானே புத்தி போகும். எனவே ஒரே நாளில் 500 ,1000 நோட்டுகளை காலாவதி ஆக்கியது மிகவும் சரியான முடிவு.

கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றி.

DEAR BLACKMONEY ....
CHECKMATE  YOU....




2 Comments:

  1. Enter your comment...my doubt is there are many jewelry shopt r selling gold with estimate bills sir.

    ReplyDelete
  2. சத்தமே இல்லாமல் கமிஷன் அடிப்படையில் வங்கி துனையுடன் மாற்றி விட்டார்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive