Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'செல்பி'யால் இறந்தவர்களில் முதலிடம் பிடித்த இந்தியா!

        உலகில் 'செல்பி' எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. எனஅமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக. ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு :


தற்போது நல்ல விஷயம் முதல் துக்க நிகழ்ச்சி வரை செல்பி எடுக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த பலர் இறந்தும் உள்ளனர். இது குறித்து அமெரிக்கா கார்நிகி மெலன் பல்கலைக்கழக குழுவினர் , செல்பி எடுக்கும்போது இறந்தவர்கள் பற்றிய ஆய்வு நடத்தினர். 

முதலிடத்தில் இந்தியா :


இதில் 2014 ஆம் ஆண்டு 15 பேரும், 2015ல் 39 பேரும் 2016ல் 73 பேரும் செல்பி எடுக்கும் போது இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் செல்பி எடுக்கும் போது இறந்தவர்கள் மட்டும் 76 பேர். இதன் மூலம் செல்பி எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.இதில் பெரும்பான்மையான இறப்புகள், அதிக உயரத்தில் இருந்து செல்பி எடுக்கும்போது, நிலை தடுமாறி கீழே விழும்போது ஏற்பட்டவையாக உள்ளது.
தடுக்க ‛ஆப்' :


இந்த ஆய்வு குழுவினர், செல்பி எடுக்கும் போது ஏற்படும் இறப்பை தடுப்பதற்கு ஆப் ஒன்றையும் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் உருவாக்கும் ஆப்-பின் படி, மிகவும் அபாயகரமான செல்பியை எடுக்கும் போது, அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையை கொடுக்குமாம். இதன் மூலம் ஆபத்தான செல்பி எடுக்கும் போது நேரும் இறப்பை தடுக்கலாம் , என அவர்கள் கூறுகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive