ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல் இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில் வழங்க,
மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு,
3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவு பாதுகாப்பு
சட்டம் அமலானதால், ஐந்து மற்றும் அதற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு,
கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய்
கூடுதல் செலவாகும்.
அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள்
முறைகேடு செய்கின்ற னர். இதை தடுக்க,'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப் பட
உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடை களில், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி
வழங்கப்பட்டுள் ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' விபரம்
பதியப்படுகிறது. பலர், ஆதார் விபரம் தராமல் உள்ளதால், வீடுகளில் ஆய்வு
நடத்த, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இன்றையநிலவரப்படி, 2.09 கோடி ரேஷன் கார்டுகளில்,7.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
அதில், 5.20 கோடி பேர் ஆதார் விபரம் தந்துள் ளனர்; மற்றவர்கள் தரவில்லை.
அதாவது, 83 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே, ஆதார் விபரம்
தரப்பட்டுள்ளது.
இதனால்,ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி தாமத மாகி வருகிறது. ஏன் ஆதார்
விபரம் தராமல் உள்ளனர் என்பதை கண்டறிய, டிச., முதல், வீடுகளில் ஆய்வு
செய்யப்படும். ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற,
'மொபைல் போன் ஆப்' மூலமும், ஆதார் விபரம் பதியலாம். அதை, பலர் பயன்படுத்தா
மல் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...