Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிரதமர் மோடியின் மற்றொரு 'சர்ஜிகல் ஸ்டிரைக்'

           கறுப்புப் பணத்தை தடுக்கவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒடுக்கவும், 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு, பாகிஸ்தானின் மறைமுக போர் நடவடிக்கைகளும் காரணம் என்ற தகவல் வெளிவந்து உள்ளது.
 
        கறுப்புப் பணத்துக்கு எதிரானதாகவே, இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், தன் பேச்சில், 'அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதிகளுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது; அவர்களுக்கு யார் பண உதவி செய்கின்றனர்; எல்லையில் இருந்து நம் எதிரிகள் கள்ள நோட்டுகள் மூலம் இங்கு பயங்கரவாதத்தை நடத்துகின்றனர். இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை, நம் வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தனர்.கடந்த காலங்களில் இல்லாத வகையில், நம் ராணுவம் நடத்திய இந்த பதிலடி தாக்குதல், பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் அசைத்து பார்த்தது. இதனிடையில், ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்ட பின், அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நிலவ வேண்டும் என்பதில் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் உறுதியாக இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிராக, சர்வதேச அமைப்புகளில், நம் நாடு பல்வேறு பிரசாரங்களை செய்து வந்ததும், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்ததும், பாகிஸ்தானுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும், பதில் தாக்குதல் கிடைத்து வந்தது, பாகிஸ்தான் தலைமைக்கு கடும் எரிச்சலை ஊட்டியுள்ளது.இந்நிலையில், இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் மறைமுகப் போரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.நேற்று காலையில், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதித்தார்.அப்போது, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் மேற்கொள்ளும் கள்ளநோட்டு புழக்க நடவடிக்கைக்கு எதிர் தாக்குதல் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படியே, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது; இது, கறுப்புப் பணத்தை ஒழிப்பதுடன், கள்ள நோட்டுக்கு எதிரான மறைமுகப் போரிலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்துள்ள தார்மீக வெற்றியாகவே கருதப்படுகிறது. 
மீட்கப்பட்ட கறுப்பு பணம்
பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் நோக்கில், தாமாக முன்வந்து கறுப்புப் பண விபரங்களை தெரிவிக்கும் திட்டத்தை, மத்திய அரசு, இந்தாண்டு அமல்படுத்தியது; 2016 ஜூன் 1ல் இருந்து செப்., 30 வரை, நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, கணக்கில் காட்டாத சொத்து அல்லது பண மதிப்பில், 45 சதவீதத்தை வரியாக செலுத்தி, அவற்றை தங்கள் சொத்து கணக்கில் சேர்த்து கொள்ளலாம். மேலும் கணக்கு காட்டுபவர்களின் பெயர் வெளியிடப்படாது என, மத்திய அரசு தெரிவித்தது. இதன் மூலம், 65 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பண விபரங்கள் வெளியாகின; இத்திட்டம் வெற்றி பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது. 
யாருக்கு, என்ன பாதிப்பு ஏற்படும்?
தினக்கூலி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத சரிவு ஏற்படலாம் ரேஷன் பொருட்கள், பால், மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்வோர், பெரும்பாலும், 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வர். இதனால், பொதுமக்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படலாம்  அலுவல் பணி, சுற்றுலா காரணங்களுக்காக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றிருப்போர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக செலவழிப்பதில் சிக்கல் ஏற்படும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக, தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவோருக்கு பாதிப்பு ஏற்படலாம்  இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி ஏற்படும்.  அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களில் வைக்கப்பட்டிருந்த, 'கேஷ் டெபாசிட்' மிஷின்களிலும், நேற்று இரவு கூட்டம் அலை மோதியது  ஏ.டி.எம்., இயந்திரங்களில், நேற்று பணம் எடுக்க குவிந்தோர், 400 ரூபாய் என பதிவு செய்து, 100 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றனர். இதனால், அனைத்து, ஏ.டி.எம்.,களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால், ஏ.டி.எம்., மிஷின்களில் பணம் காலியானது; வாடிக்கையாளர்கள் பணமின்றித் தவித்தனர் ஒரே நேரத்தில், கோடிக்கணக்கானோர் இந்த தகவலை போனில் பகிர்ந்து கொண்டதால், மொபைல் போன் சிக்னல்களில் பாதிப்பு ஏற்பட்டது; பிறரை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.  'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் பகிரப்பட்டன  பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் நேற்று, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால், பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.




1 Comments:

  1. Army soldier kastathukku munadiya ithellam nothing

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive