மேஷம்
மற்றவர்களால்
செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள்.
சகோதரங்களால் பயனடைவீர்கள்.
பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும்.
எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை
மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ரிஷபம்
நீண்ட
நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி
நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று
வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மிதுனம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட
நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில்
திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
கடகம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால்
கோபப்படாதீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித்
தவிப்பீர்கள். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில்
போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
சிம்மம்
உங்களுடைய
அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை
உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது
ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
கன்னி
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம்
உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை
வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
துலாம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
விருச்சிகம்
பிரியமானவர்களின்
சந்திப்பு நிகழும். தாயாருக்கு அலைச்சல், வேலைச்சுமை வந்து நீங்கும். பழைய
பிரச்னையில் ஒன்று தீரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்
அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில்
சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
தனுசு
துணிச்சலாக
சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும்.
செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள்
விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மகரம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வராது
என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கும்பம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக
ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும்.
முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள்
வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும்.
உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்துப் போகும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
மீனம்
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால்
அரவணைத்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம்
வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...