ஒரே ராக்கெட்டின் மூலம், 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி புதியசாதனை
படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனத்தின்(இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பொரேஷனின்
தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராகேஷ் சசிபூஷண் இதுகுறித்து செய்தி
நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வரும் 2017-ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில், 83
செயற்கைகோள்களை சுமந்துச் செல்லும் ஒற்றை ராக்கெட்டை விண்ணில் செலுத்த
திட்டமிட்டுள்ளோம். இதில் 2 செயற்கைகோள்கள் இந்தியாவினுடையது. மற்றவை
வெளிநாட்டு செயற்கைகோள்களாகும். இவற்றில் பெரும்பாலானவை, நேனோ
செயற்கைகோள்கள்.இந்த 83 செயற்கைகோள்களும் ஒரே புவிவட்டப் பாதையில்
நிலைநிறுத்தப்பட உள்ளன. அனைத்து செயற்கைகோள்களும் வெளியேறும் வரையில்,
ராக்கெட்டை நிறுத்திவைக்க வேண்டியதே இத்திட்டத்தின் மிகப்பெரிய சவாலாகும்.
இந்த சவாலான பணிக்கு, பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.
இஸ்ரோவைப் பொறுத்தவரை, ஒரே சமயத்தில் அதிக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவது புதிய முயற்சியல்ல. சுமார் 1,600 கிலோ வரையிலான எடையளவு வரை, பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட்டுககள் சுமக்கக் கூடியவை.இதற்கிடையே, 4 டன் எடை வரை சுமந்து செல்லக்கூடிய ஜிஎஸ்எல்வி-மார்க்3 ரக ராக்கெட்டுக்கான சோதனைகளையும் இஸ்ரோ துரிதமாக மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு சசிபூஷண் கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...