நாடுமுழுவதும் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் 82 ஆயிரத்து 500 ஏ.டி.எம்.கள் மாற்றப்பட்டுள்ளது.
ஏடிஎம் அதிகரிப்பு:
இது குறித்து கேஷ்லாஜிஸ்டிக்ஸ் அசோசியேசன் தலைவர் ரித்துராஜ் சின்ஹா தெரிவித்திருப்பதாவது: நாடுமுழுவதும் 2.2 லட்சம் ஏ.டி.எம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடியின் ரூபாய் மாற்றம் அறிவிப்பிற்கு பின்னர் ஏ.டி.எம்.,களை புதியதாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் வரையில் சுமார் 40 ஆயிரம் ஏ.டி.எம்.கள் புதியதாக மாற்றப்பட்டன. தற்போது இதன் எண்ணிக்கை 82 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த ஏ.டி.எம்.,களில் இது 40 சதவீதம் ஆகும். என கூறினார்.
மேலும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ் முந்த்ரா கூறுகையில் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைக்கும் பணியில் ரிசர்வ் வங்கியும் கேஷ் லாஜிஸ்டிக் நிறுவனமும் இணைந்து முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ஏ.டி.எம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. என கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...