மேஷம்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள்
பாசமழைப் பொழிவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
தன்னம்பிக்கையுடன்
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு
அதிகமாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.
புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
நண்பகல்
12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று
நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தடைப்பட்ட வேலையை
மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில வற்றிற்கு உங்கள்
அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை
ஓரளவு குறையும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடகம்
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.
உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில்
மேலதிகாரி ஆதரிப்பார். நண்பகல் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால்
எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
கனிவான
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி
சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச்
சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
புதிய முயற்சிகள் பலிதமாகும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
பிரியமானவர்களின்
சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனைப் பற்றி
அவ்வப்போது யோசிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய
உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம்
உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
இங்கிதமாகப்
பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம்
தளரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில்
மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
நண்பகல்
12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய நினைவுகளில்
மூழ்குவீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. முன்கோபத்தை
குறையுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக
எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக
கையாளுங்கள். கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வரக்கூடும்.
வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். நண்பகல்
12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எச்சரிக்கையுடன் செயல்பட
வேண்டும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும்
சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...