காஞ்சிபுரம்: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விரும்புபவர்கள்,
காஞ்சிபுரத்தில் உள்ள, 'நோடல்' மையங்கள் எனப்படும் சிறப்பு மையங்களில்
மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு தேர்வை
தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள், மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ள இந்த மையங்களில்
விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சீனிவாசன்
நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையம் மூலமே,
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் என, 175
ரூபாயை, இந்த மையங்களில் நேரடியாக செலுத்தலாம். சம்பந்தப்பட்ட மையங்களில்,
'ஆன்லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால்
மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, 25ம் தேதி கடைசி தேதி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...