'சென்னை உயர் நீதிமன்ற பணிகளுக்கு, டிச., 7ல் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை உயர்
நீதிமன்றத்தில், நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் பணியில், 92; பதிவாளரின்
நேர்முக உதவியாளர் பணியில், ஏழு; துணை பதிவாளர்களின் நேர்முக எழுத்தர்
பணியில், இரண்டு இடங்கள் என, மொத்தம், 101 காலி பணியிடங்களுக்கு, ஆக.,
27ல், தேர்வு நடந்தது. இதில், 310 பேர் பங்கேற்றனர். தேர்வர்கள் பெற்ற
மதிப்பெண்படி, நேர்முக தேர்வுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு, டிச.,
7ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது. தேர்வு
பெற்றோர் பட்டியலை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...