நீதிமன்றப் பணிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதிக்கான நேர்முக உதவியாளர்-92, பதிவாளருக்கான நேர்முக உதவியாளர்-7, துணைப் பதிவாளருக்கான நேர்முக எழுத்தர்-2 ஆகிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அது குறித்த விவரம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...