புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி, 23 வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகிறது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் 1-ஆம்
வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டு அரையாண்டுத் தேர்வுகள்
7.12.2016 முதல் 23.12.2016 வரை நடைபெறுகிறது. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை
மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், 10-ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி
முதல் மதியம் 12 மணி வரையும், 9-ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 11.30
மணி வரையும் தேர்வுகள் நடைபெறும்.
11, 12-ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் முடிந்து 24.12.2016 முதல் 1.1.2017 வரை
விடுமுறை விடப்படும். 2.1.2017-இல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என
அந்த அறிக்கையில் கல்வித்துறை இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...