-
மேஷம்
மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தினைத் திறன் பெருகும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய சிக்கல்
களை தீர்ப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்
களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். போராட்டமான நாள்.
-
கடகம்
கடகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.
-
கன்னி
கன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
தனுசு
தனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
-
கும்பம்
கும்பம்: எதிர்காலம் பற்றிய கவலை, பயம் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
மீனம்
மீனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். வியாபாரத்தில் புது வகை சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» இன்றைய ராசிபலன் 7.11.2016
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...