விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின்
விற்பனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம்
விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் கணினி பயன்பாட்டுக்கான
மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் விண்டோஸ் மென்பொருட்களே பெரும்பாலான கணினிகளில்
பயன்படுத்தப்படுகிறது.
காலத்திற்கு
ஏற்றவகையில், அவ்வப்போது விண்டோஸ் மென்பொருளில் அப்டேட் வடிவத்தை
மைக்ரோசாஃப்ட் வெளியிடுவது வழக்கம். தற்போது விண்டோஸ் 11, 12 ஆகிய
மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் கவனம் செலுத்திவருகிறது. விண்டோஸ் 10
இயங்குதளம் மட்டுமே விற்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 7, 8 விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதே
தவிர, விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரையும், விண்டோஸ் 8.1
இயங்குதளத்திற்கு 2023 வரையும் சேவை வழங்கப்படும் என்று, மைக்ரோசாஃப்ட்
தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...