சமூக
பாதுகாப்புத் துறை உறைவிட பள்ளிகளுக்கு, 66 ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டு உள்ளனர்.
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் உறைவிடப்
பள்ளிகளில், காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 66 பேரை,
ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது. 2012 - 2013ல், 'டெட்' என்ற,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண் பட்டியலில்
முன்னணியில் இருப்பவர்கள் தேர்வாகி உள்ளனர்.
அவர்களின்
பெயர், பதிவு எண், பிறந்த தேதி, வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்கள்,
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளன. 'இந்த
நியமனம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, 'டெட்' தேர்வு குறித்த
வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது' என, தேர்வு வாரிய உறுப்பினர்
செயலர் உமா அறிவித்து உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...