இந்தியாவில் 5-19 வயதுள்ள குழந்தைகளில் 6.54 கோடி பேர் இதுவரை பள்ளிக்குச்
சென்றதே இல்லை என்றும், 4.49 சிறார்கள் பள்ளிப் படிப்பை பாதியில்
கைவிட்டவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 5-19 வயதுடைய 38.01 கோடி பேரில், 26.98 கோடி (71%) பேர் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள். 4.49 கோடி (11.8%) பேர் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். 6.54 கோடி (17.2%) பேர் பள்ளிக்குச் சென்றதே கிடையாது என்று தெரிகிறது.
அதே போல, 5-19 வயதுடைய சிறார்களில் 65.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...