Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து வழங்க இலக்கு

        தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

        இந்த முகாம் திங்கள்கிழமை (நவ.7) தொடங்கியது. மேலும், இந்த முகாம் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியது: குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின் ஏ திரவம் விளங்குகிறது. இந்த திரவம் வழங்குவதால் கண் பார்வைக் குறைபாடு முற்றிலும் தடுக்கப்படுகிறது.

மேலும், கல்லீரலில் உள்ள வைட்டமின் ஏ சத்து, குழந்தை பிறந்த 4 மாதங்களில் குறைய ஆரம்பித்து, 6 மாதங்களில் மிகவும் குறைந்துவிடும். இதைத் தவிர்க்கும் நோக்கத்தில் 6 மாத குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை வைட்டமின் -ஏ திரவம் வழங்கப்பட்டு வருகிறது.

6 நாள்கள்: இந்த முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். இந்த முகாம்களில் வரும் 12-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல், மாலை 3 மணி வரை 6 நாள்களுக்கு வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive