நாடு
முழுவதும் உள்ள வங்கிகளில், 10 நாட்களில், ஆறு லட்சம் கோடி ரூபாய்,
'டிபாசிட்' குவிந்துள்ளது.
இதற்கிடையில், பொது மக்களின் பாதிப்பை அறியவும்,
நிலைமையை கண்காணிக்கவும், 27 குழுக்களை, மத்திய அரசு அமைக்கிறது. உச்ச
நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர்
நரேந்திர மோடி, '8ம் தேதி நள்ளிரவு முதல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது. அந்த நோட்டுகளை வங்கிகளில், டிச., 30 வரை மாற்றிக் கொள்ளலாம்'
என்ற, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பின், வங்கிகணக்கில் பணம்
எடுப்பதற்கும், ஏ.டி.எம்., களில் பணம் எடுப்பதற்கும், உச்சவரம்பு
நிர்ணயிக்கப்பட்டது.
கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவும், பதுக் கல் பணத்தை வெளியே கொண்டு வருவதற் காகவும், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இதனால் சுதாரித்த மக்கள், தங்களி டம் இருக்கும் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளை பெற்று வருகின்றனர்.
தாராளமாக
இது தவிர, தங்களிடம் உள்ள பழைய நோட்டு களை, வங்கிகளில் டிபாசிட் செய்து வருகின் றனர். டிபாசிட் செய்வதற்கு உச்சவரம்பு இல்லா ததால், தங்களிடம் உள்ள பழைய நோட்டு களை, வங்கிக் கணக்குகளில் செலுத்தி வருகின்றனர். இதுவரை, ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, டிபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக, வங்கி துறையினர் மதிப்பிட்டு உள்ளனர்.
எனினும், வங்கிக் கணக்குகளை, வருமான வரித்துறை கண்காணித்து வருவதால், பண முதலை கள், வேறு வழிகளில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, முயன்று வருகின்ற னர். இந்திய வங்கிகள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகூறியதாவது:
நாட்டின் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச் சார்யா, '10 முதல், 18ம் தேதி வரை, 1.34 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்துஉள்ளது' என, தெரிவித்திருக்கிறார். நாட்டில் கிடைக்கும் மொத்த டிபாசிட் தொகையில், 20 - 22 சதவீதம், அந்த வங்கியினுடையது.
அந்த தொகை, நேற்று அதிகரித்துஇருக்கும். மேலும், பெரிய தனியார் வங்கியான, ஐ.சி.ஐ. சி.ஐ., தரப்பில், 18ம் தேதி வரை, 33 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து வங்கிகளிலும் சேர்த்து, 14ம் தேதி, மொத்த டிபாசிட் தொகை, நான்கு லட்சம் கோடி ரூபாயை கடந்தது. அதனடிப்படையில் பார்த் தால், நேற்று வரை ஆறு லட்சம் கோடி ரூபாய் வந்திருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இணை செயலர்கள்
இதற்கிடையில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டதால், உருவாகி யுள்ள களநிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும், அதிகாரிகள் குழுவை அனுப்ப,மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 27 குழுக்களை, மத்திய பணியா ளர் நிர்வாகம் மற்றும் பயிற்சி துறை அமைக்க உள்ளது.
குழுவின் தலைவர்களாக, நிடி ஆயோக் அமைப்பின் கூடுதல் செயலர்கள் இடம் பெறுவர். பல்வேறு அமைச்சகங்களின் துணை, இணைச் செயலர்கள், உறுப்பினர்களாக இருப்பர்.
குழுவினர், சிறிய கிராமங்கள் மற்றும் நகரங் களுக்கும் சென்று, மக்களின் கருத்துக் களை கேட்டறிவர். பின், அது பற்றிய அறிக்கையை, மத்திய பொருளாதார விவகாரத் துறையிடம் அளிப்பர். தமிழகத்தின் களநிலவரத்தை அறிய, டி.ஜேக்கப் - நிர்வாகத் துறை, பிரவீன் குமார் - உயர்கல்வித்துறை, எம்.ஜானகி - நகர்புற வளர்ச்சித்துறை ஆகியோர் இடம்பெற்ற மூவர் குழு வருகிறது.
தமிழகத்தில் எவ்வளவு?
தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, பாரத ஸ்டேட் வங்கியில், 5,530 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. நேற்று, 6,000 கோடி ரூபா யாக, அது அதிகரித்து இருக்கலாம். சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்தியன் வங்கியில், 18ம் தேதி வரை, 11 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கிக்கு, நாடு முழுவதும், 2,400 கிளைகள் உள்ளன; அதில், 1,000 கிளைகள் தமிழகத்தில் உள்ளன. எனவே, அதன் மொத்த டிபாசிட் தொகையில், 40 சதவீதம் அதாவது, 4,400 கோடி ரூபாய், தமிழகத்தில் கிடைத்தி ருக்கும். அது நேற்று, 4,500 கோடியாக உயர்ந் திருக்கலாம் என, இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...