ஸ்டேட் வங்கியில் மட்டுமே இரண்டு நாட்களில் டிபாசிட்...ரூ.53,000 கோடி! :கள்ள நோட்டுகளை ஒழிக்க மோடி நடவடிக்கை முழு வெற்றி
மும்பை:நாடு முழுவதும், எஸ்.பி.ஐ., எனப் படும் பாரத ஸ்டேட் வங்கி
கிளைகளில், இரண்டு நாட்களில், 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, பழைய,
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள், 'டிபாசிட்' செய்துள்ளனர்.
இதன் மூலம், கள்ள நோட்டுகளை முடக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
நாட்டில், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகை யிலும், கள்ள நோட்டு புழக்கத்தை
ஒடுக்கும் வகையிலும், '500, 1,000 ரூபாய் நோட்டுகள், செல்லாது' என, பிரதமர்
நரேந்திர மோடி அறிவித்தார். ரிசர்வ் வங்கியிலிருந்து, புதிய ரூபாய்
நோட்டுகள் சென்றடைவதற்காக, வங்கிகள் மூடப்பட்டன; இரண்டு நாட்களாக,
ஏ.டி.எம்., மையங்களும் முடக்கப்பட்டன.
மக்கள் கூட்டம்
அதனால், பணம் இருந்தும், 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை
கிடைக்காமல், அன்றாட செலவுகளுக்கே பொதுமக்கள் திணறினர். 'வங்கிகள், தபால்
நிலையங்களில், நேற்று முன்தினம் முதல், பழைய ரூபாய் நோட்டுகள்
மாற்றப்படுகின்றன; டிசம்பர், 30 வரை இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களிடம் உள்ள பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள,
வங்கிகளுக்கு உடனடியாக படையெடுத்து வருகின்றனர்; நாட்டின் மிகப்பெரிய
பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ.,யில், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
லட்சக்கணக் கானோர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
சிறப்பு கவுன்டர்கள்
இது குறித்து, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, நேற்று கூறியதாவது:
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் மக்களின் வசதிக்காக, எஸ்.பி.ஐ.,
வங்கிகளில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள் ளன.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கி றோம்; சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ., கிளைகளில், 10ம் தேதி, 31 ஆயிரம் கோடி
ரூபாயும்; 11ம் தேதி பிற்பகல் வரை, 22 ஆயிரம் கோடி ரூபாயும், பழைய ரூபாய்
நோட்டுகள் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டேட் வங்கியில் மட்டும், இரண்டு நாளில், 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு பழைய
நோட்டுகள் டிபாசிட் செய்யப்பட்டுள்ளன. பிற வங்கிகளையும் சேர்த்தால்,
இத்தொகை, சில லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
இது, கறுப்பு பணத்துக்கு எதிராக, பிரதமர் மோடி துணிச்சலுடன் எடுத்த நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
அவகாசம் நீட்டிப்பு
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என
அறிவிக்கப்பட்டாலும்,அதனால், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும்
வகையில், ரயில் பயணம், மருத்துவமனை, பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியா
வசிய செலவுகளுக்கு விலக்கு அளிக்கப் பட்டது. இது போன்ற செலவு செய்ய
தேவையுள்ள இடங்களில், இரண்டு நாட்களுக்கு, பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து,
மக்கள் சேவையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
எனவே, ரயில்வே டிக்கெட் கவுன்டர்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவற்றில்
கூட்டம் நிரம்பி வழிகிறது. இதையடுத்து, அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு,
வழங்கப்பட்ட இரண்டு நாள் அவகாசம் மேலும் மூன்று நாட்களுக்கு
நீட்டிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், ரயில் டிக்கெட், நெடுஞ்சாலை சுங்க கட்டணம், மருந்து பில்கள்,
சமையல் காஸ், ரயில்வே உணவகம், தண்ணீர் கட்டணம் போன்ற சேவைகளுக்கு, பழைய
ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் இல்லை
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட
போதிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி கள், நவம்பர்,11
நள்ளிரவு வரை,பழைய ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என
அறிவிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாலும், சில்லரை
பற்றாக்குறையா லும், நாடு முழுவ தும் தேசிய நெடுஞ்சாலை களில் சுங்கச்சாவடி
கள் நிரம்பி வழிகின்றன. இதனால், பல இடங் களில் போக்குவரத்து நெரிசலும்,
குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ''நவம்பர், 14 வரை, நாடு முழுவ தும் சுங்கச்சாவடி கட்டணமின்றி
வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை
அமைச்சர்,
நிதின் கட்கரி அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...