-
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
-
கன்னி
கன்னி: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
-
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
-
மகரம்
மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
-
கும்பம்
கும்பம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
-
மீனம்
மீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனை திறன் பெருகும் நாள்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» இன்றைய ராசிபலன் 5.11.2016
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...