500 ரூபாய் நோட்டுகள் கடந்த ஒரு சில நாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் முற்றிலுமாக நின்றது. இதனால், மக்களின் பணப் பரிமாற்றம், பொருட்களை வாங்குதல் போன்றவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது பெரும் சிரமமாக இருந்தது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு சுமார் 20 நாட்களுக்குப் பின், ஒரு சில ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், அவையும் போதிய அளவில் இல்லை.
அதே சமயம் சில 500 ரூபாய் நோட்டுகள் சரியாக பிரிண்ட் ஆகாததாலும் மக்களுக்கு பீதி ஏற்பட்டது.
இந்த நிலையில்தான், ஆர்பியை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவில் சுமார் 1,660 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் தற்போது ரூ.8.3 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
தற்போது 2000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகளே வங்கிகளுக்கு அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் வங்கி அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...