உயர்நீதிமன்றங்களில் 500 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. எஸ் தாக்கூர் வேதனை.
புதுடெல்லி,உயர்நீதிமன்றங்களில் 500 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறியுள்ளார்.டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தாகூர் கூறியதாவது:உயர்நீதிமன்றங்களில் தற்போது 500 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 500 பணியிடங்களில் 121 மட்டுமே நிரப்பட்டுள்ளன. நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணியில் உள்ள நீதிபதிகளுக்கு அதிக சுமை ஏற்படுகிறது. காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும். தீர்ப்பாயங்களில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கலாம். அவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் தான் என தாம் கூறியிருந்ததை சுட்டிகாட்டினார். அந்த தீர்ப்பாயங்களுக்கு தலைமை வகிக்கும் சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இல்லை என்று தாக்கூர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...