புதுடில்லி : 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடி
அறிவிப்பு வெளியிட்டதால், பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளது.
ரூ.500 கோடி இழப்பு:
நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை
ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர்
மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இந்த அதிரடி அறிவிப்பால்
பயங்கரவாதிகள் மற்றும் போலி இந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும்
பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிதி பயங்கரவாதம்:
கடந்த 2010ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த போலி ரூபாய்
நோட்டுகளின் மதிப்பு ரூ.1600 கோடி என இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ரூ.500, ரூ.1000 இந்திய ரூபாய் நோட்டுகளை
தயாரித்து நிதி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகிறது
எனவும் ‛ரா' தெரிவித்துள்ளது.
கள்ளநோட்டுக்கு ரூ.39 :
ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை தயாரிக்க ரிசர்வ் வங்கி ரூ.29 செலவு செய்கிறது.
அதே நேரத்தில் போலி ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை தயாரிக்க ரூ.39 மட்டும்
செலவு செய்து பாக்., தயாரித்து விடுகிறது. இதனை சட்டவிரோதமாக ரூ350-400 என
விற்பனை செய்கிறது. இதன் மூலம் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு
ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் கிடைத்து வந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...