மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்புகளில்
முக்கியமானது இது. அதாவது 1000 ரூபாய்
நோட்டு முழுமையாக இன்று முதல் பயன்பாட்டிலிருந்து
விலக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில்
500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
டிசம்பர்
15ம் தேதி வரை குடிநீர்க்
கட்டணம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கான
கட்டணத்தை செலுத்த 500 ரூபாய் நோட்டை அனுமதிப்பது
குறித்த முடிவை இன்று மாலை
நிதியமைச்சகம் அறிவித்தது. அதில் இடம் பெற்றுள்ள
முக்கிய அறிவிப்பு என்னவென்றால், அந்த கட்டணத்தை 500 ரூபாய்
நோட்டுக்களை மட்டுமே செலுத்தி சலுகையை
பயன்படுத்த முடியும்.
மாறாக.
1000 ரூபாய் நோட்டு வாங்கப்பட மாட்டாது
என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1000 ரூபாய்
நோட்டு இன்று நள்ளிரவோடு முற்றாக
விடைபெறுகிறது. இருப்பினும் வங்கிகளில் தங்களது கணக்குகளில் 1000 ரூபாய்
நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...