இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு :விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகை:மணமக்கள் பெறலாம் ரூ.2.5 லட்சம்
வங்கிகளில் பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றிக் கொள்ள
அனுமதிக்கப்பட்டி ருந்த உச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக
இன்று முதல் குறைக்கப்படுகிறது.
அதிக மக்கள், பணத்தை பெற வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்கு
சலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காக மணமக்கள் வீட் டார் வங்கி
கணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டு
உள்ளது.
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க நீண்ட வரிசைகளில் நிற்க
வேண்டி இருப்ப தால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்ற னர். மீண்டும்
பணப் புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும், மக்களின் சிரமங்களை யும்
மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பொருளாதார விவகாரங்கள் செயலர் சக்தி காந்த தாஸ் டில்லியில் நேற்று கூறியதாவது:
வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிக்கப்பட்டிருந்த
உச்சவரம்பு, 4,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக, 18ம் தேதி முதல்
குறைக்கப்படுகிறது. அதிக மக்கள், பணத்தை பெற வசதியாக இந்த நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. அரசிடம் போதிய பணம் இருப்பு உள்ளது என்பதை, மீண்டும்
மீண்டும் வலியுறுத்துகிறோம்.
விவசாயிகள், தங்கள் வங்கிகணக்கில் இருந்து, வாரத்துக்கு,25 ஆயிரம்
ரூபாய்,பெற்று கொள்ள அனுமதிக்கப்படுவர். ரபி பருவ பயிர்களை பயிரிட, சிரமம்
இருக்கக் கூடாதென, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து
வர்த்தகர்களும், இதே அளவு தொகையை பெற, ஏற்கனவே அனுமதிக்கப் பட்டு
வருகின்றனர்.
பொதுமக்கள், 24 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து
பெறலாம். விவசா யிகளுக்கு, பயிர்க் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையை
செலுத்த, 15 நாள் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.திருமண செலவு களுக்கு, வங்கி
கணக்குகளில் இருந்து, 2.5 லட்சம் ரூபாய் பெற அனுமதிக்கப்படும்.
திருமணம்நடக்கும் குடும்பத்தில், யாராவது ஒரு உறுப்பினர், இந்த தொகையை
பெறலாம்.
இதற்கு, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அந்த தொகையை பெற்றுள்ளதாக, சுய
அறிவிப்பு கடிதத்தையும், 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண்ணையும்
வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பல்வேறு பொருட்களை மண்டிகளில் வைத்து வர்த்தகம் செய்வோர், வாரத்துக்கு, 50
ஆயிரம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெற அனுமதிக்கப் படுவர்.
மத்திய அரசில், 'குரூப் சி' பிரிவை சேர்ந்த ஊழியர்கள், சம்பளத்தில் முன்
பணமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்; நவம்பர் மாத சம்பளத்தில், இந்த தொகை
நேர் செய்யப்படும்.
ஏ.டி.எம்.,களில், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில், தக்க
மாற்றங்களை செய் யும் பணிகளை விரைவுபடுத்த, சிறப்பு நிபுணர் குழுக்கள்
உருவாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ரூபாய் நோட்டு விவகாரம், பார்லிமென்டின் இரு சபைகளிலும்,
நேற்று, எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு சபைகளும், நாள்
முழுவதும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...