சந்தையில் அதிரடி என்ட்ரி கொடுத்த போதும், நெட்வொர்க் பிரச்னை ஜியோவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.
குறிப்பாக 4ஜி நெட்வொர்க்கில் ஜியோதான் மிகவும் மந்தமானது என ட்ராயே கூறியது.இந்நிலையில் இந்த பிரச்னையை சரி செய்ய நாடு முழுவதும் 45,000 மொபைல் டவர்களை அமைக்க ஜியோ முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜியோ அதிகாரிகள் கூறுகையில், "ஜியோ ரூ.1.6 கோடி முதலீட்டில் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களுக்கு சேவை அளிக்கும் வகையில்தான் தொடங்கப்பட்டது.
ஆனால், மற்ற மொபைல் நிறுவனங்கள் இணைப்பில் ஒத்துழைப்பு தராததால்தான் ஜியோவுக்கு நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டது. இதை சரி செய்ய அடுத்த 6 மாதங்களில் 45,000 மொபைல் டவர்கள் அமைக்கப்படுகின்றன". என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...