நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக
நச்சுத்தன்மையை கொண்ட காற்றை டெல்லியில் வசிக்கும் மக்கள் அதிகம்
சுவாசிக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கூறியுள்ளது.
அதாவது சீன தலைநகர் பெய்ஜிங்கை விட
டெல்லியில்தான் அதிகமாக காசு மாசு பட்டிருக்கிறது. சீனாவில் தற்போது
சுத்தமான காற்று விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிலைமை விரைவில்
இந்தியாவிற்கு வந்துவிடும் என்பது டெல்லியை பார்க்கும் போது புரிகிறது.
மக்கள் நெருக்கம், வாகன புகை, தொழிற்சாலை
புகை என பல வழிகளில் அங்கு காற்று மாசடைந்து வருகிறது. அங்குள்ள காற்றை
அளவீடு செய்து பார்த்ததில், அந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் தினமும் 40
சிகரெட் புகைத்ததற்கு சமம் என்று அதிர்ச்சி செய்தி தெரியவந்துள்ளது.
இதனால், டெல்லியில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம் 6.4 ஆண்டுகள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, காற்றை வடிகட்ட நிறைய மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...