மத்திய அரசு, தேசிய சாப்ட்வேர் கொள்கை குறித்த வரைவறிக்கையை
வெளியிட்டு உள்ளது.
அதில், 2025ல், சர்வதேச சாப்ட்வேர் சந்தையில்,
இந்தியாவின் பங்களிப்பை, 10 மடங்கு உயர்த்தி, 14,800 கோடி டாலராக
அதிகரிக்கவும்; உள்நாட்டில், 35 லட்சம் வேலைவாய்ப்புகளை
உருவாக்கவும்,
இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாப்ட்வேர்களை உருவாக்க, 10 ஆயிரம் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைக்கப்படும் எனவும், வரைவறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சர்வதேச சாப்ட்வேர் துறையின் சந்தை மதிப்பு, தற்போது, 41,100 கோடி டாலராக உள்ளது. இது, வரும், 2025ல், 1 லட்சம் கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சாப்ட்வேர் துறையின் வருவாய், 610 கோடி டாலராக உள்ளது. இதில், 200 கோடி டாலர், ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. இந்திய, ஐ.டி., துறையின் சந்தை மதிப்பு, 14,300 கோடி டாலராக உள்ளது. இது, 2025ல், 35 ஆயிரம் கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...