"பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:–
கடந்த 3 மாதங்களாகவும், அதற்கும் மேலாக நடைமுறையில்
இருக்கும் நடப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.50
ஆயிரம் வரையில் தங்கள் கணக்கிலிருந்து ரொக்கமாக பணம் எடுக்க
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த பரிசீலனைக்கு பிறகு இந்த வரம்பை ஓவர்
டிராப்ட் (மேல்வரைப்பற்று), ரொக்க கடன் வசதி ஆகிய வசதிகளைக்கொண்டுள்ள
கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 3 மாதங்களாகவோ அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்தில் நடப்பு
கணக்கு, ஓவர்டிராப்ட், ரொக்க கடன் வசதி ஆகிய வசதிகளை கொண்டுள்ள கணக்குகளில்
இருந்து வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக எடுத்து
கொள்ளலாம். இந்த அனுமதி தனிநபர் கணக்குகளில் ஓவர் டிராப்ட் வசதியை
பெற்றவர்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த ரொக்கப்பணம் ரூ.2,000 நோட்டுகளாக
மட்டுமே வழங்கப்படும். மேற்கண்ட தகவல் பொதுத்துறை வங்கிகள், தனியார்
வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு
வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு
ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது." - வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான
உச்சவரம்பில் மாற்றம்; ரிசர்வ் வங்கி..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...