| தனித்தேர்வர்களுக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 27,397 ஆகும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 227 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 455. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 5 ஆகும். மேற்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tnd-ge.in என்ற இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...