Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'பொம்மை' நோட்டு போல் '2 கே' : பாதுகாப்பு அம்சங்களில் 'பக்கா'

        புதிதாக வெளியிடப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டு, பார்ப்பதற்கு, 'பொம்மை' நோட்டு போல உள்ளதாக கூறப்பட்டாலும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. 
 
          மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய, 2,000 ரூபாய் நோட்டு, பழைய, 500, 1,000, 100 ரூபாய் நோட்டுகளை விட அகலத்தில் குறைவாக உள்ளது. அதை, முதல் முறையாக பார்த்த பலர், 'குழந்தைகள் விளையாடும் போலி நோட்டு போல தோற்றம் அளிக்கிறது' என, நகைச்சுவையாக கூறினர்.
ஆனால், இந்த மெல்லிய காகிதம், கள்ள நோட்டு தயாரிப்பாளர்களுக்கு, சிம்மசொப்பனமாக விளங்கும் என, உளவுத்துறையினர் வியக்கின்றனர். புதிய நோட்டில், பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன், 'மஜந்தா' நிறமே விசேஷம். பேச்சு வழக்கில், ஆங்கிலத்தில், 1,000 ரூபாயை, 'கே' என, குறிப்பிடுவதைப் போல, 2,000 ரூபாயை, விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால், முன்புற, இடது ஓரத்தில், '2 கே' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. மேலும், இரவிலும், ஒளிரும் வகையில், 2,000 என்ற எழுத்து, 'புளோரசென்ட்' நிறத்தில் அச்சாகியுள்ளது. 'துாய்மை இந்தியா' திட்ட சின்னமான, காந்தியின் மூக்கு கண்ணாடி, பின்புறத்தில் இடம் பிடித்துள்ளது. காந்தி படம், நோட்டின் மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. நோட்டின் வரிசை எண்களின் அளவு, ஏறு வரிசையில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தாளின், இரு ஓரங்களிலும், ஏழு சிறிய கோடுகள் இடம் பெற்றுள்ளன.பின்பகுதியில், 'மங்கள்யான்' சின்னம் இடம் பெற்றுள்ளது. தேவனகிரி எழுத்தில், 2,000 என்றும், 'ஸ்வச் பாரத், மங்கள்யான்' போன்ற வார்த்தைகள், ஹிந்தியிலும் அச்சாகியுள்ளன. மற்றபடி, 'நானோ சிப்' பொருத்தப்பட்டுள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதை.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive