ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை
வெளியிட்டது.
அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர்
மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இனையதள வசதியும், இலவசமாக பேசும்
வசதியையும் அளித்திருந்தது.
இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவணம்
கொல்கத்தாவில் உள்ள வடிகையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த
ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. அவர் 554.37 GB data
உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718
ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஜியோ நிறுவணம் விளக்கம் அளித்துள்ளது. “எங்கள் நிறுவணம்
வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இனையதள சேவையும், இலவச
தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும்
ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவணம் அவ்வாறு எந்தவொரு
வடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை” என தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...