பள்ளி,
கல்லுாரிகளில், வரும், 26ல், அரசியலமைப்பு சட்ட நாள் கொண்டாடும்படி,
மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சுதந்திரம் பெற்ற பின், 1949 நவ., 26ல்,
இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த
நாள், சட்ட நாளாக ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்ட நாளாக கொண்டாடப்படும் என, அறிவித்தார். அதன்படி, 26ல் அரசியலமைப்பு சட்ட நாளை, பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், அரசியலமைப்பு சட்ட நாளை கட்டாயமாக கொண்டாட வேண்டும்; அதன் அறிக்கையை, நவ., 30ல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...