இது தொடர்பாக, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24, காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார். விழாவில், 3,397 முதுநிலை, 7,520 இளநிலை, 2,719 டிப்ளமோ மற்றும், 152 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 13 ஆயிரத்து, 788 பேர், பட்டம் மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர். பல்கலை அளவில் முதலிடம் பெற்ற, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடம் பெற்றதற்கான சான்றிதழும் பெறுகின்றனர். இளநிலை மாணவி முத்துவுக்கு, கனடா காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழும், 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Public Exam 2025
Latest Updates
Home »
» திறந்த நிலை பல்கலையில் 24ல் பட்டமளிப்பு விழா
திறந்த நிலை பல்கலையில் 24ல் பட்டமளிப்பு விழா
இது தொடர்பாக, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24, காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார். விழாவில், 3,397 முதுநிலை, 7,520 இளநிலை, 2,719 டிப்ளமோ மற்றும், 152 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 13 ஆயிரத்து, 788 பேர், பட்டம் மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர். பல்கலை அளவில் முதலிடம் பெற்ற, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடம் பெற்றதற்கான சான்றிதழும் பெறுகின்றனர். இளநிலை மாணவி முத்துவுக்கு, கனடா காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழும், 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...