2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.
2017-ம் ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு சம்பள பட்ஜெட் திட்டத்தை வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து சேலரீஸ் இன் இந்தியா (salaries in india) நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டும் 10.8% உயரும் என்று கூறியிருந்தது. ஆனால் உண்மையாக 10% மட்டுமே சம்பள உயர்வு இருந்தது குறிப் பிடத்தக்கது. சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா சம்பள உயர்வில் முன் னணியில் உள்ளது. இந்த ஆய் வில், இந்தோனேசியாவில் 9% சம்பளம் உயர்வு இருக்கும் என்றும் இலங்கையில் 8.9 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் 7 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் இந்தியாவில் சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் நன்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வுக் காக 38% ஒதுக்கப்படும் என்றும் சராசரிக்கு கொஞ்சம் அதிகமாக பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 34 சதவீதம் ஒதுக்கப்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் சராசரியாக பணிபுரியக் கூடிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 28 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ``அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு வழங்குவதைக் காட்டிலும் நன்கு பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு சரியான சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வுகள் தெளிவாக்கு கின்றன. எந்தவொரு வேறுபாடு இல்லாமல் சம்பள உயர்வு இருக்கும் என்றால் நிறுவனங்கள் நல்ல திறமையுடைய ஊழியர்களை தக்கவைப்பது சிரமமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஊழியர்கள் தேவை இருக்கும் துறைகளில் இன்னும் சிரமமாக இருக்கும்’’ என்று வில்லிஸ் டவர்ஸ் வாட்ஸன் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தகவல் சேவை பிராக்டீஸ் தலைவர் சம்பவ் ரக்யான் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டில் 3 சதவீதம் மட்டுமே சம்பள உயர்வு இருக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பார்மச்சூடிகல்ஸ் துறையில் சம்பள உயர்வு அதிகமாக இருக்கிறது. நிதி சார்ந்த துறைகளில் சம்பள உயர்வு சராசரிக்கும் கீழே 8.5 சதவீதமாக இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...