பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால்,
அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட்
கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி, நாடு முழுவதும் நாற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 258 பிக் பஜார் ஸ்டோர்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரும் வியாழக்கிழமை (நவ.24) முதல் அருகில் உள்ள பிக் பஜார் ஸ்டோருக்குச் சென்று தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து டெபிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பணம் எடுப்பதற்காக, வங்கியிலோ அல்லது ஏடிஎம் மையம் முன்போ வரிசையில் காத்திருப்பதற்குப் பதிலாக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...