இந்திய ரிசர்வ் வங்கி, காந்தி படம் இல்லாத, 2,000 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
நாட்டில், அதிகபட்ச மதிப்பில், 1,000 ரூபாய் கரன்சி நோட்டு புழக்கத்தில்
உள்ளது. புதிதாக, 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட போவதாக,
அக்டோபரில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக, சமூக
வலைதளங்களில், 2,000 ரூபாய் நோட்டு படத்தை வெளியிட்டு வருகின்றனர்.
'நானோ' இழை
ஒரு தரப்பினர், 'காந்தியை இருட்டடிப்பு செய்யும் வகையில் அவரது புகைப்படம்
இல்லாமல், வெறும் மூக்கு கண்ணாடி மட்டும் அதில் இடம் பெற்றுள்ளது'
என,சர்ச்சையை கிளப்பியுள்ளனர். மேலும் அதில் மெல்லிய, 'நானோ' இழை
பொருத்தப்பட்டுள்ளது; அதனால், 120 அடி ஆழத்தில் புதைத்து வைத்தாலும்,
செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடித்து விடலாம் என்ற தகவலும் பரவியுள்ளது.
சமீபத்தில், ஒரு ரூபாய்கரன்சி நோட்டை அறிமுகம் செய்யப் போவதாக, ரிசர்வ்
வங்கி அறிவித்தது. அப்போது, 'ஒரு ரூபாய் போன்ற குறைந்த மதிப்புடைய
கரன்சிக்கு, காகிதத்தை வீணாக்கலாமா' என, பலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டு, புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், விளையாட்டுத்தனமாக அச்சிடப்பட்ட, 100 ரூபாய் நோட்டை, பிரபல
மும்பை நடிகை வாங்கி ஏமாந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், இதுவும்
குறும்புக்காரர்கள் கைவரிசையாக இருக்குமோ என்ற சந்தேகம் கிளம்பி
உள்ளது.இதுகுறித்து, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி, கரன்சி வினியோக பிரிவு
உயர்அதிகாரிகளை கேட்ட போது, 'மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து
இதுவரை தகவல் எதுவும் வரவில்லை. புதிய, 2,000 ரூபாய் நோட்டு குறித்த
அதிகாரப்பூர்வ தகவல் இன்றி, நாங்கள் எதையும் கூற முடியாது' என,
தெரிவித்தனர்.பதுக்கலை அதிகரிக்கும்!
நாடு முழுவதும், 500 ரூபாய் மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்த நோட்டுகள், பெரிய
அளவில் பதுக்கலுக்கு உதவியாக உள்ளதாக கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு, ஒரு கோடி ரூபாயை, 1,000 ரூபாய் நோட்டுகளாக
வைத்திருப்பதற்கும், 100 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதற்கும்,
எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த சூழலில், 2,000 ரூபாய் தேவை
தானா என்ற கேள்வியை, சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...