ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கோபேவில் இந்தியர்கள் இடையே பேசினார்.
அப்போது புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் பேசியதாவது, ” இந்த நடவடிக்கை நாட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று. யாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல.
சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலர்
மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டிய கட்டாயம் உள்ளவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் மிகுந்த சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எனது
முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.”
இதே போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு எளிதாக இருக்கும்
என்றும் இதனால் எதிர்காலத்திலும் கருப்பு பண பிரச்சனை தொடரும் என
எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி,
டிசம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் இதே போன்ற நடவடிக்கை
மேற்கொள்ளப்படாது என உறுதியாக சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...