நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சுக்கூடத்தில், இரண்டு நாட்களில் ரூ.786 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மோடியின் அதிரடி:
ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து பழைய ரூ.500 நோட்டுக்குப் பதில் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.
புதிய ரூபாய் நோட்டுகள்:
ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகங்கள் கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இதில் நாசிக்கில் உள்ள அச்சகத்தில் புதிய ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ரூ.786 கோடி:
கடந்த திங்கள், செவ்வாய் (நவ.,14 மற்றும் 15) ஆகிய இரு தினங்களில் நாசிக்கிலிருந்து ஒரு கோடியே 30 லட்சம் 500 ரூபாய் நோட்டு(மதிப்பு ரூ.650 கோடி). 3 கோடியே 10 லட்சம் 100 ரூபாய் நோட்டு(மதிப்பு ரூ.130 கோடி). 3 கோடி 20 ரூபாய் நோட்டுகள்(மதிப்பு ரூ.60 கோடி) என மொத்தம் ரூ.786 கோடி மதிப்புள்ள புதிய நோட்டு அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமும் 1 கோடியே 60 லட்சம்:
கடந்த 11ம் தேதி (நவ.,11) இதே அச்சு கூடத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள, 50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாசிக் அச்சுக்கூடத்திலிருந்து சராசரியாக தினமும் 1 கோடியே 60 லட்சம் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...