Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-2 ஏ தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோருக்கு பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நவ. 21-ம் தேதி தொடங்குகிறது.

         டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர் களுக்கான பணிஒதுக்கீட்டு கலந்தாய்வு நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.

       தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பணியில் 1,947 காலியிடங்களை (நேர்காணல் இல்லாத பணிகள்) நிரப்புவதற்காக குரூப்-2 ஏ தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வினை 6 லட்சத்து 54 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வெழுதியவர் களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் ஜுன் மாதம் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தரவரிசைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 4 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது.இந்த நிலையில், பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந் தாய்வு நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 2-ல் முடிவடைகிறது.கலந்தாய்வு குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்து ள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive