நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை பெற, ஆண்டுக்கு இருமுறை, 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது.2016 டிச., மாதத்திற்கான தேர்வு, 2017 ஜன., 22ல் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் உட்பட, 80க்கும் அதிகமான பாடங்களின் கீழ், இத்தேர்வு நடத்தப்படும். இம்முறை நடக்கும் தேர்வில் முதன்முறையாக யோகா பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம், இம்மாதம், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...