கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவு பாடங் களில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு,
புவியியல், பொருளாதாரம், வணிக வியல், சமூகவியல், உளவியல், மேலாண்மை போன்றவை) உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும்.நெட் தகுதித்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப் படுகிறது. 2016-ம் ஆண்டுக்கான 2-வது நெட் தேர்வு காலதாமதமாக அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு (www.cbsenet.nic.in) கடந்த அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தபடி, இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 16-ம் தேதி (புதன்கிழமை) முடிவடைகிறது. கலைமற்றும் இலக்கியம் சம்பந்தப் பட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம்.தற்போது முதுகலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப் பவர்களும், இறுதி ஆண்டு தேர்வு முடிவை எதிர்நோக்கியிருப்பவர் களும் நெட் தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...