மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், முறையான பணி
உத்தரவு மற்றும் ஊதியம் இல்லாமல் "தாற்காலிக பணியாளர்கள்' என பெயரில்
சுமார் 150 பேர் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
மதுரை
காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசு அனுமதித்த பேராசிரியர்கள், ஊழியர்கள்
தவிர தாற்காலிகப் பணியாளர் என்ற பெயரில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தினக்கூலி ரூ.160 முதல் ரூ.120 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்கள் பட்டதாரி மற்றும் பட்டம் பெறாதவர் என தரம்
பிரிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 170 பேர் தாற்காலிக
பணியாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 50 பேருக்கு பல்கலைக்கழக
நிர்வாகத்தின் கீழ் நேரடியாகவும், எஞ்சிய 120 பேருக்கு தொண்டு நிறுவனத்தின்
மூலமும் ஊதியம் வழங்கும் முறை உள்ளது. தாற்காலிக ஊழியர்கள் சிலருக்கு 80
நாள்களுக்கும், சிலருக்கு 50 நாள்களுக்கும் என பணி உத்தரவுகள் வழங்கப்பட்டு
அவை தொடர்ந்து காலநீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இவர்களில்
பெரும்பாலானவர்கள் தொலைநிலைக் கல்வித் திட்டம், தேர்வுக் கட்டுப்பாட்டுப்
பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களில் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக 120
தாற்காலிகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்பட்டது. இப்போது,
மேலும் 28 பேருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதோடு,
அவர்களுக்கு பணிநீட்டிப்பும் வழங்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. ஆனால்
அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதுபல்கலைக்கழக விதிமுறைக்கு
எதிரானது என நிர்வாக அலுவலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
எனவே, பல்கலைக்கழகத்தில் தாற்காலிகமாக
பணியாளர்கள் எத்தனை பேர், அவர்கள் எந்தெந்தத் துறையில் பணியாற்றுகின்றனர்,
ஊதியம் எவ்வளவு போன்ற விவரங்களை நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பி.விஜயன்
கூறியது: பல்கலைக்கழகத்தில் பல மாதங்களாக ஊதியமின்றி பணிபுரிந்தவர்கள்
குறித்து கணக்கெடுக்கப்படும். ஊதியம் பெறாமல் ஓராண்டுக்கும் மேலாக
பணியிலிருப்பவர்கள் குறித்து நிர்வாகத்தின் கவனத்துக்கு
கொண்டுவராமலிருந்தது ஏன் என்றும் விசாரிக்கப்படும். நியாயமான கோரிக்கை
எனில் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.
Many such people earn money from students to make them pass. Rs 2000 per paper.
ReplyDelete