”வாத்தியார் வண்டு முருகன்’ பல ஆண்டுகளுக்கு முன்னாடி தன் ரெண்டு
புள்ளகளையும் படிக்க வச்சு பெரிய ஆளாக்கனும்னு நெனச்சு பள்ளிக்கூட்த்துக்கு அனுப்புனாரு.
அவங்க ஆசப்படியே வண்டு முருகனும் தாம்
புள்ளகல வாத்தியாராக்க எண்ணி படிக்க வச்சாரு. அவங்களும் படுச்சு முடுச்சு வேல வரும்னு
காத்துக்கிட்டுருக்கப்ப அவங்க கைக்கு ஒரு ஓல வந்துச்சு. அது என்னான்னா வாத்தியாராகனும்னா
“ வாத்தியார் பரிச்ச
” அப்படின்னு ஒன்னு வப்பாங்க
அதில பாஸாகனும்னு சொல்லிட்டாங்க ….வண்டு முருகன் தான் புள்ளகல கூப்புட்டு
டேய் தம்பிகளா பரிச்சயில கேள்வி எப்புடி இருக்குமுன்னு, தெருஞ்ச வாத்தியாருக்கிட்ட
கேட்டேன் அவரு சொன்னாரு … பானைக்கி எப்படி மண்ண கொலப்புவாங்களோ
அந்த மாதிரி வாத்தியாருக்கு படிச்சவுங்க மண்டய கொலப்பி எடுத்துருவாங்க…
கடசில பான வருதோ இல்லையோ மண்ணு வந்துரும் …. அப்பிடின்னு அப்பா மாத்தி மாத்தி மகன்களோட மண்டய
, குட்டய கொலப்ற மாதிரி சொல்லி கொலப்பிட்டாரு.
ஒருவலியா அவுங்க ரெண்டு பேரும் பரிச்சய
எழுதி பயத்துல இருந்தாங்க. அப்ப ஒரு நாளு ஒரு ஓல வந்துச்சு… அத பிருச்சு பாத்த வண்டு முருகன், மதுரவீரன
கட்டிப்புடுச்சு ம்வனே நீ வாத்தியாராகப் போறே அப்டீன்னு சொன்னாரு. மதுர வீரன் அப்ப
கேட்டான் அப்பா தம்பி மதராஸ்வீரன் வாத்தியாராயிட்டானாப்பா அப்படீன்னு கேட்டான். அதுக்கு
அப்பா சொன்னாரு நீ வாத்தியாராகி அவனுக்கு ரெண்டு
டெல்லி எரும வாங்கிக் கொடுத்து மேக்கச் சொல்லு அப்படின்னாரு. அண்ணணுக்கு கொஞ்சம் மார்க்கு
பத்தலயாம். அதான் அவன் வாத்தியாராக முடியாதுனு சொல்லிட்டாரு. நானும் எதுவும் பேசல.
அண்ணணும் எதுவும் பேசல.
ரெண்டு மாசம் கழுச்சு மதுரவீரன ரெக்காடுசீட்ட
எடுத்துக்கிட்லெல்லாம் வரச்சொல்லி மார்க்கெல்லாம் சரி பார்த்தாங்க. வேல போடுறாங்கனு
நம்பிக்கையோடு ஊராரிடம் சொல்லி வர, மதுரைக்கு சோதனை குதிரை ஏறி வந்தது. அது என்னான்னா
மதுரையோட அண்ண மதராஸ் முன்னாடி படிச்ச எனக்கு வேல கொடுக்காம பின்னாடி படிச்ச என் தம்பிக்கெல்லாம்
வேல போடப்போறீங்க. நான் அவன விட பள்ளிக்கூடத்துல நல்லா படிப்பேனு தன்னோட ரெக்காடு சீட்டையெல்லாம்
காட்டி எனக்குதான் முதல்ல வேல போடனும்னு சொல்லி அவுக குடும்ப வக்கீல வச்சு கேசு போட்டுட்டான்.
அதனால கேசு முடுயிர வரைக்கும் மதுரைக்கும் வேல கெடக்காது மதராஸ்கும் கெடக்காது. இதை
அறிந்த மதுர அட அண்ண இப்படி பண்ணிட்டாரேனு நெனச்சு வருத்தப்பட்டான். இவ்வளவு கஸ்டப்பட்டு படுச்சு வேல வாங்க முடியலயேன்னு
கவலைப்பட்டான்.
மதுர தன் பங்குக்கு தனக்கு தெரிஞ்ச வக்கீல
வச்சு இன்னொரு கேசு கொடுத்தான். அதில கஸ்டப்பட்டு படிச்சு பாஸ் ஆன எனக்கு வேலை முதல்ல
போடுங்க அப்பிடீன்னு கேசு தாக்கல் பண்ணிட்டான். அப்பாவுக்கு மதுர மேலையும் மதராஸ் மேலையும்
வருத்தம் இருந்துச்சு. சே ரெண்டு பேருக்கும் வேல கெடக்கலையே அப்படின்னு வருத்தப்பட்டாரு.
கேசு விசாரணைக்கு வர்ரப்ப எல்லாம் ’மதுரை’ வீட்டுக்கும் ’மத்ராஸ்’ வீட்டுக்கும் அப்பா, லோ… லோ… ன்னு அலஞ்சாரு. ரெண்டு பேரும் கேச விர்ராப்ல இல்ல.
இதனால வண்டு முருகன் நொந்த முருகனாயிட்டாரு. கேசு இப்படியே இழுத்துக்கிட்டே போனதால
வண்டு முருகனால தாம் பையங்களுக்கு கல்யாணங் கூட செஞ்சு வக்க முடியல. மகன்க ரெண்டு பேரும்
விடாப்பிடியா இருந்ததால கேசு மேல் கோர்ட்டுக்குப் போயிருச்சு.
வண்டு முருகனுக்கு வயசும் ஆயிட்டதால முன்ன
மாரி அவரால ஒழுங்கா பேச கூட முடியல. ஏன்னா கேசுலயே மூணு வருசத்துக்கு மேல வாழ்க்கைய
தொலச்சிட்டாடு. “ இலவு காத்த கிளி ” மாதிரி 1000 நாளுக்கு மேல ஆகியும் கேசு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் ? மதுரைக்கு
வருமா , இல்ல மதராஸுக்கு வருமான்னு கொளம்பிக்கிட்டுருக்காரு.
மதுரையும் , மதராஸும் தீர்ப்ப நெனச்சு
நெனச்சு, படிச்சதில பாதிய மறந்திட்டாங்க. மீதியும் மறக்கறதுக்குள்ள தீர்ப்பு வந்துரும்
போல தெரியுது… அட ஆமாங்க …. இன்னக்கிதானுங்க இவுங்க ரெண்டு பேத்துக்கும் விடிவு
காலம்னு நெனக்கிறேன். ஆமாம். வண்டு முருகன் பசங்களுக்கு இன்று தீர்ப்பு வருது … … ….
மதுரையும் , மதராஸும் பரிச்ச எழுதி 1179 நாளாகுது. நாலு வருசம் வரப்போகுது …
வண்டு முருகன்,
“
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா
ஆயிடை
ஆரஞர் உற்றனர்
கண் ”. (குறள் - 1179)
என்ற திருக்குறளை எண்ணி மனம் வருந்தினார்.
ஏனென்றால் தீர்ப்பு வராத பொழுது அதன் வரவு பார்த்து கண்கள் துயிலவில்லை. இன்று தீர்ப்பு
வந்த பின்னர் என் மகன்கள் இருவரும் எம்மை விட்டுப் பிரிந்து விடுவார்களோ ? என்ற பிரிவச்சத்தில்
அவர் கண்கள் துயிலவில்லை. எவ்வாறாயினும் என் கண்கள் துன்பத்தையே உடையதாக உள்ளது. என்று
தனக்குள் எண்ணிக் கொண்டார்.
தீர்ப்பைக் காண ஆவலுடனும் , ஆர்வத்துடனும்
, அமைதியுடனும் , அழுகையுடனும் , அவசரமாகவும், ஆயத்தமாகிறார் வண்டு முருகன் வாத்தியார்.
குறிப்பு: {தீர்ப்பு
வந்தவுடன் அவர் டெல்லி எருமை வாங்க டெல்லி செல்வதாகத் தகவல்}
இது கதையல்ல
!!! கதைக்கவும் அல்ல !!!
திருச்சி மாவட்டத்தில்
ஒரு கிராமத்தில் நடந்து கொண்டிருக்கும் உண்மைச் சம்பவம்.
Article by Mr. Saravanan.
இப்ப அப்பன் ஒரு கேசு போடுவான். தீர்ப்பு வந்துச்சுனா இரண்டு ம்வன்களும் பிரிஞ்சிரிவாங்க. அதனால தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வார். கேசு முடியர உள்ள அப்பன் மவன் அனைவரும் சங்கு ஊதிருவாங்க.
ReplyDelete